ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை; பெயர் காரணத்தை விளக்கிய முதல்வர்!

40


சென்னை: ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை பெரம்பூரில் ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு சென்னையில் இருக்கும் மேம்பாலங்களைப் பாரத்தாலே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவை சுரங்கப்பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும் சரி, ஏன் மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும் சரி அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை தான்.

2015ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளத்தால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இயற்கையாகவே எவ்வளவு மழை பெய்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் இன்றைக்கு சென்னை மாநகரத்திற்கு உண்டு. திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே இதற்கு காரணம். ரூ.6,495 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளது. குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.



யாரையும் விமர்சனம் செய்வதற்காக பேசவில்லை. கொச்சைப்படுத்துவதற்காக பேசவில்லை. ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் வைப்பதை பார்க்கிறோம். எனது பெயர் ஸ்டாலின். அது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் உண்டு. அது உங்களுக்கு நல்லா தெரியும். கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் கருணாநிதி வைத்திருந்த நம்பிக்கையில், எனக்கு பெயர் சூட்டியுள்ளார். வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement