யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை

8

புதுடில்லி: யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்தது. ஏற்கனவே உள்ள 2012ம் ஆண்டு விதிமுறைகளையே பின்பற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது. யுஜிசியின் இந்த புதிய விதிமுறைகள், தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி மாணவர்கள் தரப்பில் கடும் எழுந்தது.


விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஜனவரி 29) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


யுஜிசியின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஏற்கனவே உள்ள 2012ம் ஆண்டு பழைய நடைமுறை தொடரும் என உத்தரவிட்டுள்ளது. யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், யுஜிசிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை மார்ச் 19ம் தேதிக்கு சுப்ரீம்கோர்ட் ஒத்திவைத்தது.

Advertisement