2027ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்; பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

10

புதுடில்லி: 2027ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி 9வது முறையாக பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த சூழலில் இன்று (ஜனவரி 29) லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.


அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:


* 2027ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும்.

* ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும்.

* நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் அபாயங்கள் அதிகமாக இருந்தாலும், பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கிறது.

* உள்நாட்டுத் தேவையே இந்திய பொருளதார வளர்ச்சிக்கு முதன்மையான உந்துசக்தியாக திகழ்கிறது.

* ஜிஎஸ்டி மறுசீரமைப்பு, சீர்திருத்தங்கள் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை வாய்ப்பாக மாற்றியது

* இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் அதிகரிப்பதன் தாக்கத்தை ஓரளவிற்கு ஈடுசெய்யும்போது, ரூபாய் மதிப்பு குறைவாக இருப்பது தீங்கு விளைவிக்காது.

* வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு, தொழில்துறை முன்னேற்றம் ஆகியவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


@block_P@

ஒத்திவைப்பு

லோக்சபாவை பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பிப்ரவரி 1ல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.block_P

Advertisement