வங்கதேச தேர்தலுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
டாக்கா: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் முன்னிட்டு அரசியல் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, இடைக்கால அரசு முகமது யூனுாஸ் தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. எனினும், நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பிப்ரவரி 12ம் தேதி பார்லிமென்ட் தேர்தலையும், தேசிய வாக்கெடுப்பையும் ஒரே நேரத்தில் நடத்த இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 11, 12ம் தேதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த சூழலில் டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தேர்தல் காலத்தில், அரசியல் வன்முறை அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது. பேரணிகள், ஓட்டுச் சாவடிகள் மற்றும் தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் பிற மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற மதத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நிகழக்கூடும்.
* அமெரிக்க மக்கள் விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அமைதியானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும்.
* ஆர்ப்பாட்டங்கள் அல்லது பேரணிகள் மோதலாக மாறி வன்முறையாக மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து, பெரிய கூட்டங்களுக்கு அருகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* உள்ளூர் செய்திகளை கண்காணிக்க வேண்டும்.
* அவசரகால தகவல் தொடர்புகளுக்கு எப்போதும் சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை வைத்துக் கொள்ளுங்கள். அவசர தேவைக்கு 888-407-4747 அல்லது 202-501-4444 என்ற எண்களை தொடர்பு கொள்ளுங்கள். வங்கதேசத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
வார இறுதி நாள் தங்கம் விலை முதல் ஐந்தாவது டி 20 கிரிக்கெட் போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜன.,31)!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ. 15,542 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை
-
கள்ளக்குறிச்சியில் பிரதோஷ வழிபாடு
-
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி அரசு டாக்டர் கைது
-
தனியார் கல்லுாரி மாணவர்கள் 1,433 பேருக்கு லேப்டாப் வழங்கல்