பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் காசா எல்லை; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜெரூசலேம்: எகிப்து நாட்டுடனான காசா எல்லையை பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்க போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வந்த போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் 2025ல் முடிவுக்கு வந்தது. போரின் போது ரபா எல்லையை இஸ்ரேல் கைப்பற்றியது.

போருக்கு பிந்தைய நடவடிக்கைகள் ஒருபக்கம் இருக்க, தற்போது காசாவின் ரபா எல்லையை பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்க போவதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

உரிய பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னர், மக்கள் அனைவரும், ரபா எல்லையின் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சோதனைகள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும். மேலும் போர் நடைபெற்ற காலத்தில் காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் அனுமதிக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கன் என்றும் அந்நாடு அறிவித்துள்ளது.

காசாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியேறவோ அல்லது உள்ளே செல்லவோ ரபா எல்லையே ஒரே வழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement