சபரிமலை பக்தர்களிடம் கட்டணம் : வசூலிக்க கருத்து கேட்கும் ஐகோர்ட்
சபரிமலை : சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்கு, 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்து விட்டு, வராமல் போகும் பக்தர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, முன்பதிவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசிடம், அம்மாநில உயர் நீதிமன்றம் கருத்துக் கேட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்கு, ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம். அப்படி முன்பதிவு செய்யும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதில்லை. இதனால், சில நாட்களில் கூட்டம் மிக குறைவாகவும், சில நாட்களில் மிக அதிகமாகவும் இருப்பதால், ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. சபரிமலை தரிசனத்திற்கு வர விரும்பும், மற்ற பக்தர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, கேரள உயர் நீதிமன்றம் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் ஜெயகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.ஆன்லைன் முன்பதிவின் போது, 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது, மிகச்சிறிய தொகை என்பதால், அது போனாலும் பரவாயில்லை என, தங்கள் விருப்பத்துக்கு முன்பதிவு செய்து விட்டு, பக்தர்கள் சபரிமலைக்கு வராமல் போய் விடுகின்றனர். மேலும், முன்பதிவை பக்தர்கள் ரத்து செய்வதும் இல்லை. எனவே, முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிப்பது, தரிசனம் முடிந்து செல்லும் போது அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இதனால், அவசரப்பட்டு முன்பதிவு செய்து விட்டு, பின்னால் வராமல் போகிறவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என, நம்பப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும் என்பதில், கேரள உயர் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
இது தொடர்பாக, கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.கட்டணம் வசூலிப்பது சுலபமாக இருந்தாலும், அதை திரும்ப கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும். இருப்பினும், அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்வதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு இறுதி முடிவு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரூம் முன்பணம் திரும்ப தருவது முதலில் சரிசெய்யவும்
இதுவும் திராவிட மாடல் தாக்கம்
இது அவசிய மற்ற பிரச்னை. டிக்கெட் இல்லாமலேயெ பக்கதர்கள் பணம் உண்டியலில் போடுகிறார்கள். தேவசம் போர்டு கம்யூசிட்டுகளின் கை பாவையாகி பணத்தை மடை மாற்றுகிறார்கள். அதைய்ய நீதி மன்றம் கவனிக்க வேண்டும். கோயில் வருமானம் மிகையாக உள்ளது. இதை நீதி மன்றம் கவனிக்க தவறி விட்டது.
திருப்பதியில் இதைவிட அதிக கூட்டம், அதுவும் வருடம் முழுவதும். அங்குள்ள அதிகாரிகள் எப்படி கூட்டத்தை கட்டுப்படுத்துகின்றனர், அதுபோல செய்யலாமே. திருப்பதி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேற்கலாமே.மேலும்
-
வார இறுதி நாள் தங்கம் விலை முதல் ஐந்தாவது டி 20 கிரிக்கெட் போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜன.,31)!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ. 15,542 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை
-
கள்ளக்குறிச்சியில் பிரதோஷ வழிபாடு
-
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி அரசு டாக்டர் கைது
-
தனியார் கல்லுாரி மாணவர்கள் 1,433 பேருக்கு லேப்டாப் வழங்கல்