வேன் - லாரி மோதி இருவர் பலி
தர்மபுரி: ராணிப்பேட்டை மாவட்டம், பழைய மாங்காடை சேர்ந்தவர் சாவித்திரி, 53; இவரது குடும்பத்தினர், உறவினர்கள் என, 24 பேர், நேற்று முன்தினம் இரவு, சேலம் கொண்டலாம்பட்டி அருகே, குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட, வேனில் புறப்பட்டனர். குமரேசன், 34, வேனை ஓட்டினார்.
நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு, தர்மபுரி, தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் எதிரே, சாலையோரத்தில் வேனை நிறுத்தினர். அப்போது, பெங்களூருவில் இருந்து காட்டன் துணிகள் ஏற்றி வந்த லாரி, வேனின் பின்னால் மோதி, சாலையில் கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த சாவித்திரி, டிரைவர் குமரேசன் ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த தருண், 15, கண்ணு, 42, மாதிரை, 39, ஆகிய மூவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதியமான்கோட்டை போலீசார், விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?
Advertisement
Advertisement