வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

1

கரூர்: கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி காத்-திருப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட செயலர் பிரபு தலைமை வகித்தார்.


வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் கல்-வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது. 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை வி.ஏ,ஓ., என்றும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ,ஓ., என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.பதவி உயர்வுக்கான கால வரம்பை, ஆறு ஆண்டுகளில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைந்து அர
சாணை வெளியிட வேண்
டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தில், மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் ரவீந்திரன், கரூர் வட்ட தலைவர் பாலசுப்பிரம-ணியன், மாவட்ட துணை செயலர் தன்ராஜ் உள்பட பலர் பங்-கேற்றனர்.

Advertisement