திருமணத்தில் மொய் பணம் திருடிய இருவருக்கு காப்பு
குளித்தலை: திருமண விழாவில், மொய் பணம் திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், திருநாராயணபுரத்தை அடுத்த மேலகாரை காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, 44. இவரது அண்ணன் மகள் திருமணம், நேற்று முன்தினம் குளித்தலை அடுத்த அய்-யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணத்தின் போது மொய் எழுதினர். அதில், 10 ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன், பணத்தை கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு இருந்தனர். அப்போது, உறவினர்போல் திருமணத்திற்கு வந்த, நான்கு பேரில் இருவர் மொய் எழுதுவது பொல் பேசியும். ஒருவர், 500 ருபாய்க்கு சில்லரை வாங்குவது போல் பேசியுள்-ளனர்.
அதில் இருவர், மொய் பணத்தை திருடிய போது கையும் களவு-மாக சிக்கி கொண்டனர். மற்ற இருவர் அங்கிருந்து தப்பினர்.
இருவரை பிடித்து விசாரித்ததில், தேனி மாவட்டம் சின்னம-னுாரை சேர்ந்த வேல்முருகன், 54, பாண்டியம்மாள், 38, என தெரியவந்தது.
இருவரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், இருவர் மீதும் தலா 3 வழக்குகள் கருர் மாவட்-டத்தில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 சரிவு
-
வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு
-
மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி
-
விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை