ஜிலேப்பி மீன்கள் ரூ.130க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: வீரவள்ளி பகுதியில் செல்லும், கட்டளை மேட்டு வாய்க்காலில் மீன் பிடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாய னுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் பாசன நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வடிநீர் மட்டும் செல்கிறது. இந்த வடிநீரில் மீன்கள் கிடைக்கிறது. இதில் ஜிலேப்பி மீன்கள் வருவதால். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வலைகளை கொண்டு மீன்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேப்பி மீன் கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

Advertisement