4ம் தேதி முதல்வர் திண்டிவனம் வருகை 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
திண்டிவனம்: 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நிறைவு விழா மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியம் தொடக்க விழாவை வரும் 4ம் தேதி திண்டிவனத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்' என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் சிப்காட் வளாகத்தில் உள்ள உணவு பூங்கா அருகே வரும் 4ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காக விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று பிற்பகல் 2:30 மணியளவில், அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப்பின் அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், 'திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் வரும் 4ம் தேதி முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
அதே போன்று, சட்டசபையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகைக்கான நிகழ்வும் துவங்கப்பட உள்ளது. இந்த விழாவில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது' என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் எஸ்.பி., சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் யுவராஜ், நகராட்சி கமிஷனர் பானுமதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், அவைத் தலைவர் சேகர், ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், செயலாளர்கள் ராஜாராம், மணிமாறன், முன்னாள் ஒன்றிய சேர்மன் வசந்தா, பெலாக்குப்பம் ஊராட்சி தலைவர் பாக்கியராஜ் உடனிருந்தனர்.
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 சரிவு
-
வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு
-
மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி
-
விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை