விபத்தில் தொழிலாளி பலி

வடமதுரை: சுக்காம்பட்டி ஆலம்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி திருமலை நாயக்கர் 35.

நேற்று முன்தினம் டூவீலரில் அய்யலுாரில் இருந்து உறவினர் சென்னையனை 32 ,அழைத்து கொண்டு அய்யலுார் கருவார்பட்டி பகுதியில் சென்றார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.

முன்னால் சென்ற பள்ளி வேன் திடீரென நின்ற நிலையில் டூவீலர் மோதியது. இருவரும் காயமடைந்த நிலையில் திருமலை நாயக்கர் இறந்தார்.

வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement