கூல் லிப் புழக்கத்தை தடுக்க வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை வட்டார வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் ரமேஷ், கவுரவ செயலாளர் கணேசன், செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். அமைப்பு பொருளாளர் முருகன் வரவேற்றார்.

மாவட்டத்தில் கூல் லிப் போதை பொருளை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். நிலக்கோட்டையில் ரோடு விரிவாக்க பணி நடைபெறுவதை வியாபாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தல், பேரூராட்சி சொத்து வரி வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் இன்றி வரி வசூல் செய்தல், தேர்தல் போது வியாபாரிகள் ரொக்க பணம் ஐம்பதாயிரம் வைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறையை தளர்த்தி ரூ.5 லட்சம் வரை வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க ஆலோசகர் சரவணன், சங்க நிர்வாகிகள் போஸ், பாரதி முருகன், குணசேகர பாண்டியன் ,ராமச்சந்திரன், அழகர், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Advertisement