ஜனநாயகன் படம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு
சென்னை: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
விஜய் நடித்த, ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்தது. படத்துக்கு சி.பி.எப்.சி., எனும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. அதனால், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக்சன்ஸ் எல்.எல்.பி., என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உடனே தணிக்கை சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தணிக்கை வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், தங்களின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (14)
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
30 ஜன,2026 - 21:21 Report Abuse
ஹி..ஹி.. நாடாளுமன்ற தேர்தலுக்குக்கூட ரிலீஸ் ஆகப் போவது இல்லை...தட்.ஜனநாயகன் சவத்து நாயகன் ஆகும் மோமென்ட்.. 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
30 ஜன,2026 - 20:14 Report Abuse
கரூர் துயர சம்பவத்தால் தீபாவளி கொண்டாடவேண்டாம் என்று சொல்லிய ஜோசெப் விஜய் பிறகு பைபிள் படிக்க சொல்லி கேக் சாப்பிட்டு கிருஸ்துமஸ் கொண்டாடிவிட்டு பிறகு வந்த பொங்கலை கொண்டாடாமல் மரியாதைக்கு பொங்கலுக்கு ஒரு வாழ்த்துக்கூட சொல்லாமல் இருந்ததெல்லாம் எதேச்சையாய் நடந்தது என்று நம்பினால் நீயும் ஒரு இளிச்சவாய தற்குறி இந்துவே. திருந்துங்கடா தற்குறி இளிச்சவாய டுமிழ் சினிமா ரசிக அணில்குஞ்சு இந்து உடன்பிறப்புகளே. 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
30 ஜன,2026 - 19:15 Report Abuse
கிறிஸ்துவ மிஷினரிகளால் இறக்கிவிடப்பட்ட ஜோசெப் விஜய் பக்கத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர் செங்கோட்டையன். என்ன காம்பினேஷன் இது? சிக்கன் பிரியாணியில் சேமியா பாயசத்தை ஊற்றி பிசைந்து சாப்பிட்ட மாதிரி. 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
30 ஜன,2026 - 19:14 Report Abuse
ஜனநாயகன் படத்தை வைத்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பேசி வோட்டை வாங்கி விடலாம் என்று நினைத்த விஜய்க்கு ஆப்பு. 0
0
Reply
Raja k - ,இந்தியா
30 ஜன,2026 - 19:02 Report Abuse
கேவியட் மனு தாக்கல் செய்யும் அளவிற்கு வன்மம், 0
0
Reply
P SenthilKumar - ,இந்தியா
30 ஜன,2026 - 17:56 Report Abuse
படத்தை பார்த்து முடிவை சொல்ல எத்தனை நாட்கள் தேவை? 0
0
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
30 ஜன,2026 - 21:17Report Abuse
அந்த வாய்ப்பை பயன் படுத்தாமல் நீதிமன்றத்தை நாடி விளம்பரம் தேடுகிறார்கள்.. தணிக்கை குழுவுக்கு சென்று இருந்தால் இந்நேரம் படம் வெளி வந்து பப்படம் ஆகி இருக்கும் 0
0
Reply
lana - ,
30 ஜன,2026 - 17:50 Report Abuse
கேவியட் என்பது ஒரு தற்காப்பு மனு. இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் வழக்கு வந்தால் என் தரப்பு கருத்து /நியாயம் கேளுங்க என்று கோரும் மனு. சில மெத்த படித்த வழக்கறிஞர் கள் எதிர் தரப்பு க்கு நோட்டீஸ் வழங்க அவகாசம் கொடுக்காமல் தீர்ப்பு கேட்டு முறையிடும். எனவே இந்த முறை. கரூர் விவகாரம் யிலும் விஜய் தரப்பு கேட்காமல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி ய தீர்ப்பு இந்த காரணம் ஆல் தான் உச்ச நீதிமன்றம் இல் மிகுந்த கேள்வி உட்பட்டது 0
0
Reply
GMM - KA,இந்தியா
30 ஜன,2026 - 17:32 Report Abuse
தணிக்கை வாரியம் ஏன் கேவியட் மனு தாக்கல்? ஆஷா ரத்து. அமர்வு ஆஷா தீர்வு மீது ரத்து. உச்ச நீதிமன்றத்தில் முறையீடு. தணிக்கை வாரியம் இருக்கும் போது அதன் முடிவை நிறுவனம் ஏற்க வேண்டும். ஒரே பிரச்சனை. 3 தீர்வுகள் எப்படி . அந்நிய முதலீட்டு எப்படி நம் நாட்டில் குவியும்? அரசியல், குடிமக்கள் அஞ்சும். அந்நிய நாடுகள் அஞ்சுமா? 3 தீர்வு கேள்விக்கு மத்திய அரசு பதில் சொல்ல முடியுமா? 0
0
Reply
முருகன் - ,
30 ஜன,2026 - 17:24 Report Abuse
நாட்டில் பல வழக்குகள் திசை தெரியாமல் இருக்கிறது குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழலில் ஒரு திரைப்படத்தை தடுக்க நினைத்து மீண்டும் மீண்டும் தடை போட நினைப்பது அரசியல் தலையீடு இன்றி வேறு என்னவாக இருக்கும் 0
0
duruvasar - indraprastham,இந்தியா
30 ஜன,2026 - 19:28Report Abuse
ஐயா திருப்பாராம்குன்றம் வழக்கில் தீபம் ஏற்றக்கூடாது என இந்து அறநிலைய துறையே வழக்கு தொடர்ந்ததே அந்த சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தீரோ ?அரசியல் தலையீட்டை பற்றி பேச உனனக்கு என்ன தகுதியிருக்கிறது. 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
30 ஜன,2026 - 17:21 Report Abuse
தற்குறித் தலைவனே...? உனக்கு பாஜக..வை பத்தி தெரியாது... நீயும் ரௌடியா ஃபார்ம் ஆயிட்ட.... நீயும் ரௌடிதான், நீயும் ரௌடிதான்...னு உன்ன உசுப்பேத்தி, உசுப்பேத்தி... கரூர்ல கொடுமையான நிகழ்வுக்கு காரணமான உன்கூட இருக்குற அரசியல் அனுபவம் இல்லாத... சில்லுண்டி பசங்க பேச்சை கேட்டு ஓவரா டேன்ஸ் ஆடுற...? வேணாம்... விட்டுறு... சங்கிகளான பாஜக எந்த எல்லைக்கும் போகும்... நீ தாங்கமாட்ட...? ஒழுங்கா ஓடி வந்துடு...? 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
அஜித் பவாருக்கு கட்சி ஒன்று சேர வேண்டுமென்பதே...கடைசி ஆசை! மஹா., துணை முதல்வர் ஆகிறார் பவார் மனைவி?
-
தொழில் முடிவுகளை எடுப்பதில் துணை நின்றுள்ளது 'தினமலர்'
-
நாடு முழுதும் பள்ளி மாணவியருக்கு இலவச நாப்கின்!... உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
-
மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி
Advertisement
Advertisement