ஒரு வாரத்தில் முடிவு; அமைச்சரை சந்தித்த 'டிட்டோ - ஜாக்' அறிக்கை

சென்னை; தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ - ஜாக்' நிர்வாகிகள், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷை சந்தித்தனர்.

பின், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்குவது, அரசாணை 243ல் செய்ய வேண்டிய திருத்தங்கள், 5,400 ரூபாய் தர ஊதிய பாதிப்புகளை நீக்குவது, தொகுப்பூதிய காலத்தை, காலமுறைக்கான பணி காலமாக்கி உத்தரவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என, அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

அவற்றைக் கேட்ட அமைச்சர், 'தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இந்நிலையில், பிப்., 2 முதல், 'டிட்டோ - ஜாக்' மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், சென்னையில் ஒரு வாரத்துக்கு தங்கி, கோரிக்கைகளுக்கான அரசாணைகளை பெறும் நடவடிக்கைளில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement