வருமான வரித்துறை ரெய்டால் பயம்: பெங்களூருவில் தொழிலதிபர் தற்கொலை

1

பெங்களூரு: வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிஜே ராய், பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் .


கேரளாவைச் சேர்ந்தவர் சிஜே ராய். இவர் கான்பிடென்ட் குழுமம் என்ற பெயரில்ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு பெங்களூருவின் ரிச்சண்ட் சாலையில் அலுவலகம் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறையற்ற வகையில் சொத்து குவித்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று அவரது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக பயம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.


லைசென்ஸ் வாங்கி வைத்து இருந்த அவரது துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அறையில் தனியாக இருந்த அவர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். சத்தம் கேட்டு அங்கு இருந்தோர் பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement