திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவில் பக்தர்கள் வெள்ளம் பழநி ஆண்டவருக்கு பாலாபிஷேகம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவருக்கு அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இக்கோயிலில் உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தெய்வானை எழுந்தருளினர். உற்ஸவர்களுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது.
சிவாச்சாரியார்கள் பூஜை பொருட்களுடன் உப கோயிலான மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு யாக பூஜை முடிந்து மூலவர் பழநி ஆண்டவருக்கு 100 லிட்டர் பால், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட 16 வகை அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனைக்கு பின்பு பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.
2 முருகப்பெருமான் புறப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மட்டும் புறப்பாடாகி ரத வீதிகள், கிரிவீதியில் உலா நிகழ்ச்சி நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடகினர். இரண்டு உற்ஸவர்கள் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை தைப்பூசம் அன்று மட்டுமே நடக்கும்.
காவடிகள் திருப்பரங்குன்றம், மதுரை சுற்றுவட்டார பக்தர்கள் பால், பன்னீர், இளநீர் காவடி எடுத்தும், முகத்தில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குழந்தைகளுடன் வந்த பெற்றோரில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் தலையில் கிரீடம் வைத்தும், கையில் வேல் கொடுத்தும் துாக்கி வந்தனர். பலர் குழந்தைகளுக்கு முருகன் வேடம் அணிந்து அழைத்து வந்தனர்.
இலவச தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு ஒரு வரிசையும், கட்டணத்திற்கு தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. இலவச தரிசன வரிசை கோயில் வாசல்முதல் மலைக்குப் பின்புறம் புதிய படிக்கட்டு வரை 2 கி.மீ., தொலைவுக்கு நீண்டு இருந்தது. இதில் 5 மணிநேரம் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கட்டண வரிசையில் பஸ் ஸ்டாண்டு வரை 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வழக்கமாக கோயில் நடை மதியம் ஒரு மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் மதியம் கோயில் நடை சாத்தப்படவில்லை. காலை முதல் இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
@block_B@
வழக்கமாக தைப்பூசத்தன்று பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு குறைந்த அளவிலேயே வருவர். நேற்று தைப்பூசம், பவுர்ணமி, முகூர்த்தம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு, தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பேசு பொருளானது. இதன் எதிரொலியாகவும் எப்போதும் இல்லாதபடி நேற்று திருப்பரங்குன்றத்தில் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அவதி கோயில் வாசலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, மறுபுறம் மலைக்குப் பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில் வரை பக்தர்கள் வரிசையில் நின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி, கூரை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஏராளமானோர் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பால்குடம், காவடிகள் எடுத்து வந்தனர். அவர்களையும் வரிசையில் செல்லுமாறு போலீசார் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பால்குடத்துடன் வந்த பக்தர்களும் வரிசைக்கு அனுப்பப்பட்டனர். பல்வேறு பகுதியில் இருந்தும் யாத்திரையாக பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் வெயிலில் 3 மணி நேரம் காத்திருந்து கோயிலுக்குள் சென்றனர். வரும் காலங்களில் பால்குடம், காவடி, முகத்தில், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வருவோருக்காக தனிப்பாதை அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.block_B