அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்: விஜய்
சென்னை: அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
@1brஅவரது அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் தவெக. 2026 சட்டசபை தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர்.
எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (21)
V K - Chennai,இந்தியா
02 பிப்,2026 - 11:29 Report Abuse
இவர் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் மக்களை பார்க்கமாட்டார் ஆனால் முதல்வர் பதவி மட்டும் வேண்டும் மக்கள் என்ன அவ்வளவு அறிவு இல்லையா 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
02 பிப்,2026 - 11:26 Report Abuse
படத்துல வசனம் சரியில்ல .., ஆங் ,.,.,. 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
02 பிப்,2026 - 11:26 Report Abuse
திமுக, அதிமுக, தவேக எது ஆட்சிக்கு வந்தாலும் எல்லாமே ஒன்றுதான். அதிமுகவில் பாஜக இருப்பதால் கொஞ்சம் நன்மைகள் தமிழகத்திற்கு கிடைக்கும். தவேக மட்டுமல்ல திரவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் அனைவருமே கூமுட்டைகள்தான். திராவிடம் உங்களை அறியாமல் உங்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.திராவிடம் என்பது ஒரு விஷதச் செடி. கொடிய போதை. 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
02 பிப்,2026 - 11:25 Report Abuse
மாட்டையே கண்ல பாக்காதவனெல்லாம் மாடு பிடிக்கிற கதையை சொல்லி திரியறானுக. 0
0
Reply
Bharathi - Melbourne,இந்தியா
02 பிப்,2026 - 11:02 Report Abuse
மொதல்ல பனையூர விட்டு தமிழ்நாட்டை நோக்கி வாங்க. இல்லைனா கட்சி பேரை பனையூர் வெட்டி கழகம்னு மாத்திடுங்க. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
02 பிப்,2026 - 10:58 Report Abuse
வசனகர்த்தாவுக்கு பல படங்கள் செய்ய வாய்ப்பை அள்ளித்தரும் வகையில் எழுதப்பட்ட அருமையான வசனங்கள். டைரக்டர்தான் யார் என தெரியவில்லை. 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
02 பிப்,2026 - 10:38 Report Abuse
ஒரே காருக்கு வரி கட்ட மனசு வரவில்லை. இவரு நாட்டுக்குத் தலைவனாகி என்ன கிழிக்கப் போகிறார் ? ஊழல் இன்னும் வளரும். 0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
02 பிப்,2026 - 10:29 Report Abuse
பனையூரில் உட்கார்ந்து பாயாசத்தை வடைகறியில் தொட்டு சாப்பிடுவோம்.
.. நீ எதுக்கும் பயன் பட மாட்ட. வெட்டி பயல் 0
0
Reply
Madhavan R - ,இந்தியா
02 பிப்,2026 - 10:24 Report Abuse
முதலில் வீட்டில் இருந்து வெளியே வந்து எப்பொழுது மக்களை சந்திப்பீர்கள்? 0
0
Reply
selvi - ,இந்தியா
02 பிப்,2026 - 10:24 Report Abuse
WE SUPPORT VIJAY ANNA. TVK NEXT CM VIJAY 0
0
HoneyBee - Chittoir,இந்தியா
02 பிப்,2026 - 10:30Report Abuse
அட கூமுட்ட 0
0
ramesh - chennai,இந்தியா
02 பிப்,2026 - 10:45Report Abuse
நாடு நாசமாய் போக இப்படிப்பட்டவர்களே நல்ல உதாரணம் 0
0
ramesh - chennai,இந்தியா
02 பிப்,2026 - 10:47Report Abuse
இது பிரச்சார தளம் அல்ல. 0
0
vijai hindu - ,
02 பிப்,2026 - 11:08Report Abuse
கொடுமை 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழக உலகளாவிய சுற்றுலா மாநாடு; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; கொத்து கொத்தாக செத்துப்போன காகங்கள்; பீஹார் மக்கள் பீதி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைவு
-
பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை
-
வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு
-
மாரத்தானில் சாதிக்கும் அரண்மனை நகரத்து பெண்
Advertisement
Advertisement