தனிநபர் முதலீட்டு ஆலோசனைக்கு 'ஜியோ பிளாக்ராக்' புதிய தளம்
இந்தியாவில் தனிநபர் முதலீட்டு ஆலோசனை களுக்கான, பிரத்யேக டிஜிட்டல் தளத்தை, 'ஜியோ பிளாக்ராக் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ்' நிறுவனம் துவக்கி உள்ளது.
'ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்' மற்றும் 'பிளாக்ராக்' நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான 'ஜியோ பிளாக்ராக் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ்' இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
புதிய டிஜிட்டல் தளம், 'அலாவுதீன்' டெக்னாலஜியை பயன்படுத்தி, தினமும் முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவை கண்காணித்து, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கும்.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்.
ஆலோசனை சேவைகளுக்கு கட்டணம், 1 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுக்கு ஆண்டுக்கு 350 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடுக்கு, மொத்த முதலீட்டு மதிப்பில் ஆண்டுக்கு 0.35 சதவீதம் கட்டணமாக செலுத்தலாம்.
ஆரம்ப சலுகையாக, முதல் மூன்று மாதங்கள் கட்டணமின்றி பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ பைனான்ஸ் மற்றும் 'மைஜியோ' செயலிகள் வாயிலாக டிஜிட்டல் தளத்தை முதலீட்டாளர்கள் அணுக முடியும்.
குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் குறைந்த கட்டணத்தில் முதலீடு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளை, எளிமையாக தங்கள் மொபைல் போன் வாயிலாக பெற முடியும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா