ரூ.49.46 லட்சத்திற்கு தேங்காய், கொப்பரை ஏலம்

கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் அருேக சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 21,810 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 46.69 ரூபாய், அதிகபட்சம், 63.66 ரூபாய், சராசரியாக, 61.55 ரூபாய் என, மொத்தம், 6,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 3 லட்சத்து, 66,970 ரூபாய்க்கு விற்பனையானது.


கொப்பரை தேங்காய், 564 மூட்டைகள் வரத்தானது. முதல்தரம் ஒரு கிலோ, குறைந்த
பட்ச விலையாக, 165.99 ரூபாய், அதிகபட்ச விலையாக, 206.20 ரூபாய், சராசரி விலையாக, 200.09 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக, 134.99 ரூபாய், அதிகபட்ச விலையாக, 196.59 ரூபாய், சராசரி விலையாக, 177.99 ரூபாய் என, 25,581 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 45 லட்சத்து, 79,871 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 49 லட்சத்து, 46,841 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement