முருகன் பாடலை இழிவு படுத்திய த.வெ.க.,வினர் நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ., நிர்வாகி மனு

சேலம்: சென்னையில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் முருகன் பாடலை திரித்து பாடி, இழிவு படுத்திய பாடகர் வேல்முருகன் மற்றும் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் மனு அளித்துள்ளார்.


பா.ஜ., சேலம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் அஜீத் சாக்கோ சார்பில், நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நடந்த, த.வெ.க., மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், பாடகர் வேல்முருகன், த.வெ.க., தலைவர் விஜயை இந்து கடவுள் முருகனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.


மேலும் முருகன் பாடலான, 'உள்ளத்திலே நீயிருக்க, உன்னை நம்பி நான் இருக்க...' என்ற முருகன் பக்தி பாடலை திரித்து, 'எங்கள் தளபதியே வருவாய்' என பாடி, இந்து மத நம்பிக்கையையும், முருக கடவுளையும் இழிவுபடுத்தி பாடிய, பாடகர் வேல்முருகன் மீதும், உடந்தையாக இருந்த கொள்கை பரப்பு செயலர் ராஜ்மோகன், த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement