தொலைந்த மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் தொலைந்த மொபைல் போன்கள், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கரூர் சைபர் கிரைம் போலீசார் சார்பில், தொலைந்துபோன மற்றும் திருடு போன மொபைல் போன்களை கண்டுபிடிக்க, கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 25 லட்ச ரூபாய் மதிப்புடைய, 136 பேரின் மொபைல் போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும், சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்த, 15 பேரின், 97 லட்சத்து, 33,543 ரூபாய் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அதை, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி, எஸ்.ஐ., லலிதா, தனிப்பிரிவு எஸ்.ஐ., வள்ளிமுத்து உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முருகன் பாடலை இழிவு படுத்திய த.வெ.க.,வினர் நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ., நிர்வாகி மனு
-
தி.மு.க.,வின் ஏமாற்று அரசியலுக்கு இந்த தேர்தலில் முடிவு: இளங்கோவன்
-
மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 407 பேர் கைது
-
'நலம் காக்கும் ஸ்டாலின்' கல்லாவியில் நாளை முகாம்
-
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் மறியல்; 560 பேர் கைது
-
ரூ.36.56 கோடியில் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
Advertisement
Advertisement