மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 407 பேர் கைது

சேலம்: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தம், நேற்று தொடங்கப்பட்டது.
சேலத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரோஜா தலைமையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டு, கோட்டை மைதானத்தில் காலை, 11:30 மணிக்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து, 12:05 மணிக்கு, கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாது
காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியல் செய்த, 400 பெண்கள் உள்பட, 407 பேரை கைது செய்தனர்.


இது தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் சரோஜா கூறுகையில், ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி, எங்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, 6,750 ரூபாய் ஓய்வூதியம் தேவை. பணி ஓய்வின்போது, சத்துணவு
ஊழியருக்கு, 5 லட்ச ரூபாய், சத்துணவு பணியாளருக்கு, 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். எங்களுடைய, 10 அம்ச கோரிக்கைகளில், முதல்கட்டமாக, 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை எங்களுடைய வேலை நிறுத்தம் தொடரும்.


ஏற்கனவே, நான்கு கட்ட போராட்டத்தின் விளைவாக, 2 கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்,'' என்றார்.

Advertisement