தி.மு.க.,வின் ஏமாற்று அரசியலுக்கு இந்த தேர்தலில் முடிவு: இளங்கோவன்

ஆத்துார்: கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், அ.தி.மு.க.,வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமையில் நடந்தது.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


அப்போது அவர், ''மத்திய அரசு நிதி தரும் என்று தான், தி.மு.க., வாக்குறுதி வழங்கியதா? தி.மு.க., ஆட்சியை, மக்கள் விரட்டும் நேரம் வந்துவிட்டது. விவசாயியான இ.பி.எஸ்., அறிவித்த, ஐந்து தேர்தல் வாக்குறுதியால், தி.மு.க.,வுக்கு பயம்
வந்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, மத்திய அரசிடம் தேவையான உரிமை, தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பெற்றுத்தர முடியும். தி.மு.க.,வின் ஏமாற்று அரசியலுக்கு, மக்கள் இத்தேர்தலில் முடிவு கட்டுவர்,'' என்றார்.


தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓ.பி.எஸ்., அணியின் தலைவாசல் மத்திய ஒன்றிய செயலர் வேல்முருகன் உள்பட, 50 பேர், நேற்று, மாவட்ட செயலர் இளங்கோவன் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement