அண்ணாதுரை நினைவு நாள் தி.மு.க.,- அ.தி.மு.க., மரியாதை

கரூர்: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, நேற்று கரூரில் நடந்தது.



தி.மு.க., நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணா
துரையின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, நேற்று, மாநிலம் முழுவதும் நடந்தது. கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், மனோகரா கார்னர் ரவுண்டானாவில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு, தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநில சட்டத்துறை துணை செயலாளர் மணிராஜ், மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகர செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர்கள் பாண்டியன், ராஜா, ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.


* கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்க
ராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் தானேஷ் குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், பகுதி செயலாளர்கள் சக்திவேல், சுரேஷ், தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில், ஜவஹர் பஜாரில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது, மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் ஓம்சக்தி சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement