கோடைகாலம் நெருங்கும் நிலையில் விற்பனைக்கு வந்த தர்பூசணி, முலாம்பழம்


கரூர்: கோடைகாலம் நெருங்கும் நிலையில், கரூரில் முலாம்பழம், தர்பூசணி பழங்கள்
விற்பனைக்கு குவிந்துள்ளன.


ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைகாலமாகும். கரூர் மாவட்டத்தில், பனிப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் உடல் சூட்டை குறைக்கும் வகையில், தர்ப்பூசணி, முலாம்பழம் ஆகியவை, கரூரில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.


கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், திருச்சி மற்றும் கோவை சாலைகளில், வேன்களில் முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரூர் பகுதி
களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள முலாம் பழம், ஒருகிலோ, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிகளில், கரூர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தர்பூசணி, ஒரு கிலோ, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement