பென்ஷன் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ஈரோடு: அனைத்து ஓய்வூதியதாரர் சங்கங்களின் ஒன்றிப்பு சார்பில், மண்டல கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், அரங்கநாதன், சுப்பராயன், வேணுகோபால், அழகிரிசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் சின்னசாமி வரவேற்றார்.
பென்ஷன் திருத்த சட்டத்தால் ஒரு கோடி மத்திய அரசு ஓய்வூதியர்களின் உரிமை
நேரடியாக பாதிக்கிறது.


மாநிலங்கள் மற்றும் பொதுத்துறையில் உள்ள சில கோடி ஓய்வூதியர்களையும் பாதிக்கும். எனவே இச்சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை வரம்பில், ஓய்வூதிய தர நிர்ணயம் என்ற வார்த்தையே இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை அழிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement