பிரதமரை தாக்க சதி: சபாநாயகர் அதிர்ச்சி தகவல்
புதுடில்லி: '' லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கக்கூடும் என எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், அவரை அவைக்கு வர வேண்டாம் என நான் தான் அறிவுறுத்தினேன்,'' என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
லோக்சபா காலையில் கூடியதுமே, 'ஜனாதிபதி உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பேச அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, காங்., எம்.பி.,க்கள் கடும் அமளியில் இறங்கியதால், கேள்வி நேர அலுவல்கள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து அவை கூடிய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு
ஏற்கனவே அறிவித்தபடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து, பிரதமர் மோடி பேசுவார் என்ற எதிர்பார்ப்பில், மாலை 5:00 மணிக்கு சபை கூடியது. ஆனால், அதுவும் நடக்காததால், லோக்சபா நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தன. பதில் சொல்ல பயந்து பிரதமர் அவைக்கு வரவில்லை என ராகுல் கூறியிருந்தார்.
இன்றும் லோக்சபா கூடிய போது எதிர்க்கட்சிகள் அளியால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் லோக்சபா வரலாற்றில் முதல்முறையாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆனது, பிரதமரின் பதில்உரை இல்லாமல் இன்று நிறைவேறியது.
block_B
மக்கள் முன்னர்
இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது: அவையில் சில எம்பிக்களின் நடவடிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் இருந்தது. சில எம்பிக்களின் நடவடிக்கை கரும்புள்ளியாக இருந்தது. சபாநாயகர் அலுவலகத்தில் சில எம்பிக்கள் தவறானவகையில் நடந்து கொண்டனர். நேற்று பார்லிமென்டில் என்ன நடந்தது என்பதை நாடு பார்த்தது. பிரதமரின் இருக்கையை நோக்கி எம்பிக்கள் எப்படி சென்றார்கள் என்பதை பார்த்தார்கள். பிரதமரை தாக்கக்கூடும் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்காக பிரதமர் மோடியை லோக்சபாவுக்கு வர வேண்டாம் என நான் தெரிவித்தேன்.
நன்றி
அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவையின் தலைவர் லோக்சபாவில் பேசாதது முறையானது அல்ல. லோக்சபாவுக்கு வராமல் ஒப்புக் கொண்டு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை பிரதமர் தடுத்துவிட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதென்ன மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களை படை எடுப்பது போனாலே அனுப்புவது. இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி உள்ளது. ஆகையால் உளவுத்துறை எச்சரிக்கையை உதாசீனப் படுத்துவது பாராளுமன்றத்திற்கு மற்றும் நாட்டுக்கு நல்லது இல்லை. என்ன என்னவோ செய்து பார்க்கிறார்கள் காங்கிரஸ் டீம். எந்த பந்தை போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார்கள் பிஜேபி டீம். எதையாவது செய்யறோம்னு நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறார்கள்.
மோடி அவர்களது ஆட்சியில் எந்தவொரு எதிர்க்கட்சி ஆளும் மாநிலமும் கலைக்கப்படவில்லை ....கான் கிராஸ் கட்சி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசுகள் 99 முறை கலைக்கப்பட்டு இருக்கின்றன ..... மோடி அவர்களின் மென்மையான போக்கு தான் .....பிரதமர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுவதில் ஆரம்பித்து ......இன்றைக்கு பிரதமர் அவர்களை தாக்க முயற்சி செய்ய அளவுக்கு வந்து இருக்கிறது.
இனி ராகுல் பாராளுமன்றத்தில் பேசினால் ஆளும் கட்சியினர் தடுக்க வேண்டும். பிரதமருக்கே மரியாதை இல்லாத போது இனி கருணை பார்க்க கூடாது
ஓய் தமிழர்களே, இன்று மதியம் 5 மணியிலிருந்து 6.37 வரை பிரதமர் ராஜ்ஜிய சபாவில் ஆற்றிய உரையை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அடடா உங்களுக்குத்தான் இந்தி தெரியாதே. கேட்பதற்கு பயந்து இண்டி கூட்டணி எடுத்தது ஓட்டம். ஒவ்வொரு கட்சியாக பெண்டு எடுத்தார். முக்கியமாக கையை. காண, கேட்க கோடி கண்கள் மற்றும் காதுகள் வேண்டும். நான் ரசித்தேன். இதை மோப்பம் பிடித்து நேற்று மக்களவையில் ரகளை செய்தார்கள். அப்பட்டமான சதி.
5.2.2026 நல்ல வேளையாக கருப்பு தினமாக மாறாமல் ஓ பிர்லா தடுத்து அவை மாண்பை காத்து விட்டார்.
ஒரு நாற்பது செக்யூரிட்டியோடு வரவேண்டியதுதானே. இங்கே வந்தா அஞ்சடுக்கு 22000 போல்லிஸ் வருதே.
ஆம் ₹200 கூட்டம் இப்படி தான் இருக்கும்
எதிர் கட்சிகள் சில அரசியல் வழக்குரைஞர், அந்நிய சக்தி, உள்நாட்டு கூலி படை பாதுகாப்பில் உள்ளனர். கருவூலத்தை விட கறுப்பு பணம் இருக்கும் . பண மதிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை மிரண்டு விட்டனர். மம்தா அமுலாக்க துறை தாக்கி, ஆவணங்கள் கைப்பற்றி அழிக்கிறார். மன்றம் வக்கீல் என ஏற்று வாதிட அனுமதி. அடுத்த மோடி நகர்வு கணிக்க முடியவில்லை. பிஜேபி ஒன்று தான் கள்ள குடியேறிகளை கண்காணிக்கிறது. சதி, குழப்பம் தான் வழி.
யாருக்கும் யார் பேசியும் கேட்கவேண்டும் என்னும் எண்ணம் இல்லை. ஒருவர்மீது ஒருவருக்கு நம்பிக்கையில்லை. எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதித்துவிட்டு பிறகு பிரதமர் பேசியிருக்கலாம். இறுதியுரையாக பிரதமர் பேசும்போது மறுப்புகளை சொல்லியிருக்கலாம்.
தனது கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க முயற்சிக்கும்போது பதிலைக் கேட்காமல் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்பவர்களுக்கு பதில் கூறாமல் விடுவதுதான் நேர்மையான வழி.
பாராளுமன்றத்தில் பொய் தகவல்களை சொல்லக்கூடாது என்று விதி உள்ளது ராகுல் எப்போதுமே பொய் பேசி நேரத்தை வீணடிக்கிறார் தவிர வெளிவராத புத்தகம் எப்படி அவர் கைக்கு கிடைத்தது புத்தக விளம்பரத்துக்ககாகவும் இருக்கலாம் அது தவறு என்பதால் அனுமதிக்க முடியாது ராகுல் வெறும் விளம்பரப்பிரியர் இன்னமும் காங்கிரஸும் சீன கம்ம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் என்ன என்று தெரிவிக்காத தேச துரோகியும் கூட
ஆமாம் காட்டு விலங்குகள் கூட இப்படி கத்தாது இந்த எதிர் கட்சிகள் நாட்டை குட்டிச் சுவறாக்கும் கூட்டம் போல் நடந்து கொள்கிறார்கள். அவையில் பேசாமல் எப்போதும் வெளியே தான் இருக்கிறார்கள். வெட்கக்கேடு
அவர்மேல் உள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து மக்களை திசைதிருப்ப...
ஆம். பப்பு வியட்நாம் மற்றும் சீனா விஷயங்கள் வெளியே வராமல் இருக்க இப்படி எதிரி கட்சிகள் நாட்டை நாசம் செய்யும்
ஶ்ரீனிவாசன் தட்டில் இன்று முன்னூறு
பிரதமரின் கெம்பீரத்தை சிதைப்பதாக இவரது பேச்சு இருக்கிறது. சபாநாயகர் அரசியல்வாதிபோல பேசக்கூடாது.
பிரதமரை தாக்க எந்த இழிபிறவிகள் எத்தனித்தாலும் தூக்கி போட்டு சாணி வர மிதிக்கணும். எவ்வளவு துணிச்சல் இந்த இத்தாலி மாபிய கூட்டத்திற்கு? எங்கே வந்து யாரிடம்?
பார்லிமெண்டை பற்றி பேசும் போது நீ ஏன் தமிழக சட்டசபை சபாநாயகர் பற்றி ஞாபகப் படுத்துற?
நீங்கள் பதிவிட்டதில் இறுதி வரி அதாவது "சபாநாயகர் அரசியல்வாதிபோல பேசக்கூடாது" என்பது "தமிழக சபாநாயகருக்கு மட்டுமே பொருந்தும்".மேலும்
-
மாயமான கோப்புகளை தேடி தர போக்குவரத்து அதிகாரிக்கு 'கெடு'
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
-
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு
-
துபாயில் உறுப்பு தானம் காரங்காட்டில் உடல் அடக்கம்
-
தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
-
மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா