எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

திருபுவனை: அங்காளன் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

திருபுவுனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தனது பிறந்த நாளை, செல்லிப்பட்டில் அவரது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி, கொண்டாடினார்.

திருவாண்டார் கோவில், பஞ்சநதீஸ்வரர் கோவில், கொத்தபுரிநத்தம் முத்துமாரியம்மன் கோவில், திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கலிதீர்த்தாள்குப்பம் அமிர்தேஸ்வரி திருமண மண்டபத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

விழாவில் அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், ரிச்சர்ட் ஜான்குமார், ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், மாவட்டத் தலைவர்கண்ணபிரான் ஆகியோர் பொன்னாடை அணிவித்து,பரிசு வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் ஜே.சி.எம்., மக்கள் மன்ற திருபுவனை தொகுதி தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் வடிவேல் உள்பட பலர்பங்கேற்றனர்.

மதகடிப்பட்டுபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை அங்காளன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார்.

Advertisement