வெனிசுலா கச்சா எண்ணெய் இந்தியா வாங்குமா? மத்திய அரசு வெளிப்படை

4

புதுடில்லி: வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


நேற்று முன்தினம் இரவு இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18 சதவீதம் ஆக குறைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியா வாங்கஉள்ளதாக தெரிவித்து இருந்தார்.


இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் தலையாய முன்னுரிமை என பல முறை கூறியுள்ளோம். சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப நமது எரிசக்தி ஆதாரங்களை அதிகரிப்பதை உறுதி செய்வதையே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மையமாக வைத்தே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.


வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரு துறைகளிலும் எரிசக்தித் துறையில் இந்தியாவிற்கு நீண்ட கால கூட்டாளியாக இருந்து வருகிறது. நாங்கள் 2019 - 20 வரை வெனிசுலாவில் இருந்து எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. அதன் பிறகு அதை நிறுத்த வேண்டியிருந்தது. மீண்டும் 2023- 24 ல் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்கத் துவங்கினோம். ஆனால், தடை விதிக்கப்பட்டதால், அதுவும் நிறுத்த வேண்டியிருந்தது.
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அணுகுமுறைக்கு ஏற்ப வெனிசுலா உட்பட எந்தவொரு நாட்டுடனும் கச்சா எண்ணெய் விநியோகம் குறித்த வணிக ரீதியான ஒப்பந்தங்களை ஆராய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்



அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனைத் தொடர்ந்து வரி குறைத்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கைக்கு, பிரதமர் நன்றி தெரிவித்தார். 18 சதவீதம் என வரி குறைப்பால் இந்தியாவில் தயாரான பொருட்கள் இனிமேல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரிக்கும். வர்த்தக ஒப்பந்தம், நமது ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கும். தொழிலாளர் நலன் சார்ந்த துறைக்கு பெரிய ஊக்கம் கிடைப்பதுடன் வேலைவாய்ப்பு அதிகரித்து, நமது மக்கள் முன்னேற்றம் மற்றும்வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement