வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெ., சொத்துகள் ஏலம்: உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

11

சென்னை : ' வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்' என , சென்னை உயர் நீதிமன்றத்தில் , வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் , 13.69 கோடி ரூபாயை செலுத்தக் கோரி , அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு , கடந்த ஆகஸ்ட் பதினோராம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது . இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் , தீபா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கில், மற்றொரு வாரிசான தீபக்கும் சேர்க்கப்பட்டார். இந்த மனுவை நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும். 2026 ஜன.,31 வரை வட்டியுடன் சேர்த்து 9.17 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளது ஜெயலலிதாவின் வாரிசான தீபக், தவணை முறையில் 1.12 கோடி ரூபாயை செலுத்தி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் 18 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement