'டாஸ்மாக்' ஊழியர்க்கு ஆதரவு பிப்., 11ல் அ.தி.மு.க., பேரணி

சென்னை: 'டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, வரும் 11ல், அ.தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் பேரணி நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கைகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து, அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், வரும் 11ம் தேதி காலை, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து, எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணி நடத்தப்படும். முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடக்கும் பேரணியின் நிறைவில், டாஸ்மாக் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement