மீன் விற்பனை சரிவால் மீனவர்கள் வேதனை
கரூர்: கிருஷ்ணராயபுரம்
அடுத்த, மாயனுாரில் கதவணை கட்டப்பட்-டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து
வரும் காவிரி நீரே கதவ-ணையில் செல்கிறது. இதில், 1.5 டி.எம்.சி., தண்ணீர்
தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, 8
மாதங்களுக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மீன-வர்கள் காவிரி
ஆற்றில் பரிசலில் சென்று, மீன்கள் பிடித்து வந்-தனர். கதவணையில் தண்ணீர்
இருப்பதால், மீன் வரத்து சீராக கிடைத்தது. பின்னர், கட்டளை மேட்டு
வாய்க்கால் கரையில் வைத்து, மீன்களை விற்பனை செய்தனர்.கடந்த, ஜன., 28
முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்-பட்டுள்ளது. இதனால் மாயனுார்
கதவணைக்கு நீர் வரத்து சரிந்-தது. இருப்பினும் கதவணையில் தேங்கியுள்ள
தண்ணீரில், மீன் பிடித்து வருகின்றனர். கடந்த, வாரம் கிலோ, 150 ரூபாய்க்கு
விற்ற ஜிலேப்பி மீன்கள் நேற்று, 100 ரூபாய்க்கு விற்பனையா-னது. கெண்டை
மீன், 50 ரூபாய்க்கு விற்பனையானது. விடு-முறை தினங்களில் மட்டுமே விற்பனை
கூடுதலாக இருக்கும்.
மேலும்
-
தர்மபுரியில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட்; காணொளியில் திறந்த முதல்வர் ஸ்டாலின்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 சரிவு; 2 நாட்களில் ரூ.6,240 குறைவு
-
பிளஸ் 2 செய்முறை தேர்வு ; பணி நியமன ஆணை வழங்கல்
-
3ம் நாள் மறியல் போராட்டம்; அங்கன்வாடி ஊழியர்கள் கைது
-
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடந்த நடன நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்
-
போலீஸ்காரர் மனைவியிடம் தங்க செயின் பறிப்பு: வாலிபர் கைது