புகழிமலை முருகன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

கரூர்: வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. நேற்று விடை-யாற்றி உற்சவம் நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்-ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்து.


பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்-டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பின், நன்செய் புகழூர் அக்ரஹாரத்திற்கு உற்சவ மூர்த்திகள் அலங்-கார வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. மதியம், 2:00 மணிய-ளவில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து புஷ்ப அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். அப்போது, பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Advertisement