மக்களுக்கு இனியாவது கிடைக்குமா சுத்தமான குடிநீர்! விளாமரத்தூர் குடிநீர் திட்டம் துவக்கம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில் வசிக்கும் மக்களின், சுத்தமான குடிநீர் பருகும் கனவை நிறைவேற்றும் வகையில், விளாமரத்துார் குடிநீர் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றில் இருந்து, தினமும் ஒரு கோடியே, 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சுத்தம் செய்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஆற்றில் ஆலை கழிவுகள், குன்னூர் நகரின் கழிவு நீர் கலக்கிறது. இதனால் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு ரூ.22 கோடி ஒதுக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின. இதற்காக நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூரில், பவானி ஆற்றில் (இன்டெக்வெல்) தண்ணீரை உறிஞ்சி எடுக்கும், கிணறு வெட்டியும், ஆற்றின் அருகே, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது.
அங்கிருந்து தண்ணீரை கொண்டு வர, சாமண்ணா நீரேற்று நிலையம் வரை, குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தார்.
மேட்டுப்பாளையம் நகரில் அண்ணாஜி ராவ் சாலையில், 4.40 கோடி ரூபாய் செலவில், அண்ணா தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், புதிதாக 15 கடைகள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு, அண்டர் கிரவுண்டில் காலியிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வ ளாகத்தையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமை வகித்தார். துணை தலைவர் அருள்வடிவு மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். கமிஷனர் அமுதா வரவேற்றார். அரங்கசாமி உள்பட பலர் பேசினர். நகராட்சி பொறியாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.
மேலும்
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்
-
தை வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்
-
தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
-
குப்பையில் சின்டெக்ஸ் தொட்டி மக்கள் கடும் அவதி