3ம் நாள் மறியல் போராட்டம்; அங்கன்வாடி ஊழியர்கள் கைது

நாமக்கல்: தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், கோரிக்கையை வலியுறுத்தி, மாநில முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த, 3ம் நாள் தொடர் வேலை நிறுத்தம், சாலை மறியல் போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் அனுராதா தலைமை வகித்தார்.

தேர்தல் வாக்குறுதிப்படி, அங்கன்வாடி, சத்துணவு பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில், 19,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளருக்கு, அலுவலக உதவியாளர் நிலையில், 15,700 ரூபாய் சம் பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, ஒப்பாரி வைத்தபடி கும்மியடித்து பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 280 பேரை கைது செய்த போலீசார், மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவித்தனர்.

Advertisement