அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடந்த நடன நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்

பள்ளிப்பாளையம்: வெடியரசம்பாளையம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பள்ளிப்பாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி துவங்கி நடந்து வந்தது. நிகழ்ச்சிக்கு, இரவு, 10:00க்கு மேல் அனுமதி இல்லை என
ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இரவு 7:00 மணிக்கு துவங்கிய நடன நிகழ்ச்சி, இரவு 10:00 மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்தது. பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்த உத்தரவிட்டனர்.

ஆனால், அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சிலர், 'எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதியாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது' என, தெரிவித்தனர். போலீசார், தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

Advertisement