காலையில் சரிந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்தது. மாலையில் ரூ.1,140 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 04) ஆபரண தங்கம் கிராம், 14,900 ரூபாய்க்கும், சவரன், 1,19,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 05) தங்கம் விலை கிராமுக்கு, 580 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 4,640 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாலையில் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 259 ஆக விற்பனை ஆனது. சவரனுக்கு 1,140 ரூபாய் உயர்ந்த ஆபரண தங்கம், சவரனுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ஆக விற்பனை ஆகிறது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
குரு தாமஸ் திருநெல்வேலி - ,
06 பிப்,2026 - 12:50 Report Abuse
தங்கம் விலை இனி வருங்காலத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 0
0
Reply
மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'
Advertisement
Advertisement