பிளஸ் 2 செய்முறை தேர்வு ; பணி நியமன ஆணை வழங்கல்
நாமக்கல்: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு வரும் மார்ச், 2ம் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 9,638 மாணவர்கள், 9,382 மாணவியர் என மொத்தம், 19,020 பேர் எழுதுகின்றனர்.
இதற்கான ஆயத்த பணி அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் செய்து வருகின்றனர். விடைத்தாள் தைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வரும், 9ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தேர்வுக்காக, 120 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் -2 செய்முறை தேர்வில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் எழிலரசி தலைமை வகித்தது, பணிநியமான ஆணைகளை வழங்கி பேசுகையில், '' எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நேர்த்தியாக செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி, பள்ளிக்கல்வி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'