தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்

சில்குரி காரிடரின் முக்கியத்துவம்

வடகிழக்கு இந்தியாவை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான பகுதி மேற்கு வங்கத்தில் உள்ள 'சில்குரி காரிடர்'. வரைபடத்தில் பார்ப்பதற்கு கோழியின் கழுத்தை போல இருப்பதால் இப்பெயர் வந்தது.

இது 20 - 22 கி.மீ., அகலம் கொண்ட குறுகிய பகுதி. காரிடரின் இருபுறமும் நேபாளம், வங்கதேசம் எல்லையும், வடக்கில் பூடான் எல்லையும் உள்ளது. இது தவிர இப்பகுதியின் வடக்கில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதி, சிக்கிம் செல்லும் வழியாகவும் உள்ளது. இப்பகுதியில் 41 கி.மீ., துாரத்துக்கு சுரங்க ரயில்பாதை அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement