எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி

3

''லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பொறுப்பு இல்லாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் 19 மணி நேரம் வீணா கிவிட்டது,'' என, சபாநாய கர் ஓம் பிர்லா விரக்தியை வெளிப்படுத்தினார்.


லோக்சபா நேற்று காலை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வழக்கம் போல அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுப்பு, எட்டு எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரச்னை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.,க் கள், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.


மேலும், சபையின் மையப் பகுதிக்கு சென்று, கூச்சலிட்டனர். இதனால், ஆவேசமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சியினர் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வதாக கடிந்து கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது: பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது முதலே பொறுப்புணர்வு இல்லாமல், சபையில் கூச்சலிட்டு வருகிறீர்கள். இதனால், சபையின் அலுவல்கள் பாதிக்கின்றன. எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பொறுப்பற்ற அணுகுமுறையால், 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வரை லோக்சபாவின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.


லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் நடத்தையை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்றைய அலுவல் பட்டியலில், காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கேள்வி இடம் பெற்றுள்ளது. அதற்கான பதிலை கேட்பதற்கு கூட விருப்பம் இல்லையா? இவ்வாறு அவர் பேசினார்.


அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், வேறு வழியில்லாமல் மதியம் 12:00 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதன் பின், மீண்டும் லோக்சபா கூடியபோதும், இதே நிலை தொடர்ந்தது. பதாகைகளை உயர்த்தி பிடித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர்.


அவர்களை அமைதியாக இருக்கையில் அமரும்படி சபையை வழிநடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னடி பலமுறை கேட்டுக் கொண்டார். எனினும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், நாள் முழுதும் சபையை அவர் ஒத்திவைத்தார்.

@block_B@

பதிலளிக்க பிரதமருக்கு தைரியமில்லை: கார்கே



ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, 'ஜனாதிபதியை மட்டுமின்றி அரசி யலமைப்பையும் காங்கிரஸ் அவமதித்து விட்டது' என, குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், நேற்று செய்தியாளர்களிடம் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, 97 நிமிடம் பேசிய பிரதமர் மோடி, திரும்ப திரும்ப பொய்யை மட்டுமே கூறினார்.

முன்னாள் ராணுவ தளபதி நரவனேவின் புத்தகம் எங்களுக்கே கிடைத்துள்ள நிலையில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கவில்லையா? முதலில் உண்மை என்னவென்பதை காது கொடுத்து கேளுங்கள். அதன் பின் பதில் அளியுங்கள். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தைரியம் பிரதமருக்கு இல்லை. சீக்கியர்களை நாங்கள் அவமதித்து விட்டதாக பிரதமர் கூறினார். அது தவறு. எங்கள் ஆட்சியில் தான் மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்தார்.

மோடி அரசு பார்லியை ஜனநாயக முறைப்படி நடத்த விரும்பவில்லை. எப்ஸ்டீன் கோப்புகளில் தன் பெயரையும் தொடர்புபடுத்தி தகவல் வெளியானதால் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் சரணடைந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.block_B



- நமது டில்லி நிருபர் -

Advertisement