பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், 17 வயது சிறுமி சார்பில், 30 வார கருவை கலைக்க அனுமதிக்க கோரி, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி, மஹாராஷ்டிராவின் மும்பை ஜே.ஜே.மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யலாம்.
சம்மதத்துடனான உறவால் கர்ப்பமா அல்லது பாலியல் வன்முறையா என்பது இவ்வழக்கில் முக்கியமல்ல. சிறுமி கர்ப்பத்தை தொடர விரும்பவில்லை என்பதே காரணம்.
டாக்டர்கள் குழு அறிக் கையில், கருக்கலைப்பால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறப்பட்டுள்ளது. எனவே, பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர கட்டாயப்படுத்த முடியாது. கருக்கலைப்புக்கு மறுத்தால், அங்கீகாரமற்ற டாக்டர்களால் நாட்டுக்கும் ஆபத்து ஏற்படும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
ரூ.4.50 லட்சம் மதிப்பு கஞ்சா: அம்பத்துார் அருகே பறிமுதல்
-
அறுவடைக்கு தயாராகும் 'காலே கஜார்' ; தோட்டக்கலை துறை தீவிர முயற்சி
-
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு: உடந்தையாக இருந்த இருவர் கைது
-
கள்ளக்குறிச்சியில் பதநீர் விற்பனை ஜோர்
-
விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு தடுத்து விட்டது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
-
ஓடும் ஆம்புலன்சில் சிசுவின் அழுகுரல் குன்னுாரில் நள்ளிரவில் மகிழ்ச்சி