திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'
கர்னுால் : ஆந்திராவில், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது, குளியலறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில், திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில், கடந்த 2019 - 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். இதையடுத்து, நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, 15 மாதங்களுக்கு மேலாக சி.பி.ஐ., தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
சமீபத்தில், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 'லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என, சிறப்பு விசாரணை குழு தெரிவித்தது.ஆனால், நெய் கலப்பட விவகாரத்தில், 240 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கர்னுால் மாவட்டத்தின் கழுகுட்லா பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., அரசு, திருப்பதி வெங்கடாஜலபதியின் புகழை கெடுக்கும் நோக்கில், குளியலறைகளை சுத்தம் செய்யும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட நெய்யை, லட்டு தயாரிக்க ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தினர். இதில், இரண்டு வகை உள்ளன.சில தாவர அடிப்படையிலானவை; அவை விலை உயர்ந்ததும் கூட. ஆனால், விலங்கு கொழுப்பால் தயாரிக்கப்பட்ட நெய்யின் விலை குறைவு. இதைப் பயன்படுத்தி நெய் தயாரிக்கப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
240 கோடி மோசடி என்றால் வனஸ்பதியை அதற்க்கு மாற்றாக வேறு ஏதோ ஒரு ரசாயனத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். 240 கோடி என்பது எளிதில் சம்பாதிக்கக்கூடிய பணமல்ல என்பது நீதிமன்றத்துக்கும் தெரியும். ஆனால் கலப்பட வியாபாரிகளை அப்படியே விட்டு விடுவது வன்மம்.
அடுத்தது மாட்டுக்கு வெச்ச புண்ணாக்கில் கழிவிரைச்சி கலப்படம். அதனால்தான் அது கறந்த பாலில் விலங்கு கொழு ப்பு வந்திருச்சுன்னுஉருட்டலாம்.
ஒரே லட்டை மாத்தி மாத்தி உருட்டுறார்.
போலி நெய் கதை பொய் என்று சிபிஐ கைவிட்ட நிலையில், லட்டில் குளியலறை ரசாயனம் என்று கதறி அழுது கொண்டு இருக்கிறார்.
இந்த விளையாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள் சந்துரு. மக்களின் பக்தியுடன் விளையாட வேண்டாம்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களின் புனிதத்தை கெடுத்து அந்நிய நாட்டு மிஷனரிகளின் பணத்துக்கு ஆசைப்பட்டு செய்த காரியத்துக்கு இந்த ஜெகனுக்கு இறைவன் தக்க தண்டனை கொடுப்பான். இந்த ஜெகன் பாணியில்தான் இங்கே இருக்கும் அல்லேலூயா பாபு தற்போது பல்லிபாபு என்கிறவர் மெல்ல மெல்ல இந்துக்களின் கோவில்களில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றார்.
போலி நெய் குன்ற்றச்சாட்டை பொய் என்று சிபிஐ சொல்லி இருப்பது பற்றி உன்னோட கருத்து என்னவோ?மேலும்
-
ரூ.4.50 லட்சம் மதிப்பு கஞ்சா: அம்பத்துார் அருகே பறிமுதல்
-
அறுவடைக்கு தயாராகும் 'காலே கஜார்' ; தோட்டக்கலை துறை தீவிர முயற்சி
-
ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு: உடந்தையாக இருந்த இருவர் கைது
-
கள்ளக்குறிச்சியில் பதநீர் விற்பனை ஜோர்
-
விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு தடுத்து விட்டது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
-
ஓடும் ஆம்புலன்சில் சிசுவின் அழுகுரல் குன்னுாரில் நள்ளிரவில் மகிழ்ச்சி