தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
கரூர்: கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்களாகியும், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.
கரூர் அருகே, பெரிய குளத்துப்பாளையம்-மூர்த்திப்பாளையம் சாலையில் சில நாட் களுக்கு முன், புதிதாக தார்ச்சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால், உரிய நேரத்தில் சாலை அமைக்கவில்லை.
இந்நிலையில், கரூர் நகர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொது மக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர் களின் டயர்கள், அடிக்கடி பஞ்சராகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
எனவே, கரூர் பெரியகுளத்துப்பாளையம்- மூர்த்திப்பாளையம் சாலையில் உடனடியாக, தார்ச் சாலை அமைக்க நடவடிக் கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
சைக்கிளில் அமைதி பயணம்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு