அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
நியூயார்க்: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படைகள் தொடர்பாக இரு நாடுகளும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் இன்று காலை வரைபடத்துடன் கூடிய ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா வரிக்குறைப்பு செய்ய இருக்கும் பொருட்கள் தொடர்பான பட்டியலுடன் நம் நாட்டின் வரைபடமும் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
முதல் முறையாக முழுமையான ஜம்மு காஷ்மீரும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதுதான் நமது நிலைப்பாடு.
ஆனால் இத்தனை ஆண்டு காலமாக அமெரிக்காவின் அரசுத்துறைகள் வெளியிட்ட பல்வேறு வரைபடங்களும் பாகிஸ்தானுடைய நிலைப்பாட்டுக்கு தகுந்தபடியே இருந்தன. அவற்றை இந்திய அரசு தொடர்ந்து ஆட்சேபித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அவற்றை அமெரிக்க அரசு கண்டுகொள்ளவே செய்யாது. இது தான் இத்தனை ஆண்டுகளாக நடந்தது.
இப்போதுதான் முதல் முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு ராணுவ தளபதி அசீம் முனீரும் டிரம்ப் அரசை தாஜா செய்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி உள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மூன்று முறை அமெரிக்கா சென்று உள்ளார். அந்நாட்டு அரசு, அதிபர் டிரம்புக்கு நோபல் அமைதி பரிசு வழங்குவதற்காக பரிந்துரையும் செய்தது.
இந்த கூழைக்கும்பிடு முயற்சிகள் அனைத்தையும் வீணாக்குவது போல் இப்போது அமெரிக்க வர்த்தகத் துறை வரைபடம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா வெளியிட்டுள்ள வரைபடமானது, இந்தியா தொடர்பான அந்நாட்டு அரசின் எண்ணத்தில், செயல்பாட்டில் இருக்கும் மாற்றத்தை குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்ததோ இல்லையோ இங்குள்ள அதிலும் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு தருதலைகளுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சியாக இருக்கும்....!!!
இந்த வரைபடம் பற்றி நாம் உஷாராக இருக்கவேண்டும்.நமது பிரதமர் இதனை நன்கு உணர்ந்திருப்பார்.
டிரம்ப்புக்கு ஏதோ காரியம் ஆகவேண்டும். அதற்கு இது ஒரு துருப்புச் சீட்டாக இருக்குமோ?
தனக்கு கிடைக்கும் பெனிபிட்டுக்கு ஏற்ப யாருடனும் ஒட்டிக்கொள்ளும் குணம் உடையது அமெரிக்கா .....
அமெரிக்கா தெளிந்து விட்டது
வெற்றி வெற்றி. அப்போ இவ்வளவு நாளா, இதெல்லாம் தெரிஞ்சே எங்ககிட்ட விளையாடி இருக்கீங்க. அப்படி தானே ? இருந்தாலும், நீங்க நல்லவரா கெட்டவரா மிஸ்டர் டிரம்ப் ? உங்களை பாம்புனு நெனச்சி தாண்டவும் முடியல, கயிறு நெனச்சி மிதிக்கவும் முடியல.
இது உண்மை என்றாலும் கோமாளி என்ற வேண்டுமானாலும் பண்ணுவாங்க
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்
திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு எங்க ஊரு மைசூரு
படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிட நோக்கனும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க
படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா
सुनो सुनो भाई सुनो सुनो में
पुंजाबवाला गीत सुनो
पुंजाबवाला गीत सुनो
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் देखो देखो
ஆஹா देखो देखो
உய்யாஹு देखो देखो
உய்யாஹு देखो देखो
உய்யாஹு देखो देखो
ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து பேசிப் பழகும் கிள்ளைகள்
பேசிப் பழகும் கிள்ளைகள்
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்
சிறிது நேரத்திலேயே இந்தியாவின் எல்லா மாநிலத்தையும் சுற்றி வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டீரே ....மிக்க நன்றி....!!!
மத்திய அமைச்சர்கள், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றி.
என்ன போட்டாலும் நேருவிய கோழைத்தனங்கள் சரிசெய்யப்படும் வரை உருட்டுவது வீண். சிந்தூரில் விட்டதை பிடித்தே ஆகவேண்டும்.
உங்களால விட்டதையும் பிடிக்க முடிஞ்சுதா ?
Beggars cannot be choosers..மேலும்
-
சைக்கிளில் அமைதி பயணம்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்