தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு
1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 05) தங்கம் விலை கிராமுக்கு, 580 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 4,640 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்தது.
நேற்றைய நிலவரம்
நேற்று (பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 259 ஆக விற்பனை ஆனது.
சவரனுக்கு 1,140 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம், வெள்ளி விலை வார இறுதி நாளில் உயர்வை சந்தித்து இருக்கிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
என்றைக்கும் ஏறிய தங்கம் விலை குறைஞ்ச சரித்திரம் கிடையாதுமேலும்
-
சைக்கிளில் அமைதி பயணம்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்