10 ஆண்டுகளில் ரயில்வேயின் நிதி நிலை மேம்பட்டுள்ளது; பார்லியில் அஸ்வினி வைஸ்ணவ் தகவல்
புதுடில்லி: கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயின் நிதி நிலை மேம்பட்டுள்ளது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2014-24 காலகட்டத்தில் 5.04 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. தற்போது ஆட்சிக் காலத்தில் மேலும் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும், பயணிகள் வருவாயை அதிகரிக்கவும், செலவைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் நிதி நிலைமையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில்வேயின் ஒட்டுமொத்த செலவு ரூ.2.74 லட்சம் கோடி. சரக்கு போக்குவரத்து அதிகரித்த போதிலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.37,841 கோடியாக இருந்த எரிசக்தி (டீசல் மற்றும் மின்சாரம்) செலவு தற்போது ரூ.32,400 கோடியாகக் குறைந்து உள்ளது.
உதவி லோகோ பைலட்டுகளின் 18,000 காலியிடங்களை நிரப்பும் செயல்முறை நிறைவடைந்துள்ளது. தேர்வு மையங்களில் இருந்து வரும் எந்தவொரு புகாருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கு மோடி அரசு
அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடியாக இருந்த பட்ஜெட், தற்போது ரூ.11,486 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'