ஓயவே மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

2

சென்னை: ''ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல்'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோட முதலீட்டில் மிட்சுபிசி நிறுவனம் அமைத்துள்ள ஏசி மற்றும் கம்ப்ரெசர் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிட்சி உற்பத்தி ஆலை! 2023-இல் புரிந்துணர்வு கையெழுத்தானது!இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.

ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் திராவிட மாடல். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement