ஒபாமாவை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மிச்செல் ஒபாமாவை அவமதிப்பது போல், குரங்குகளை போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்பிற்கு அந்நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்ததை விமர்சனம் செய்திருந்தார். ஜோ பைடனையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், தனது 'ட்ரூத் ' சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டு இருந்தார். ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் 2020 தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது எனத் தெரிவித்து இருந்தார். மேலும், அத்துடன், இந்த வீடியோவில், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் தலையை குரங்குகளில் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதற்கு அமெரிக்காவில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை டிரம்ப் வெளியிடுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, ஓவல் அலுவலகத்தில் ஒபாமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அமெரிக்க பாதுகாப்பு முறைகள் பலவீனம் ஆக ஒபமா முக்கிய காரணம்
ஒபாமா ஜென்டிலா ப்ராடு பண்ணுவார்... ட்ரம்பு பஜாரியா ப்ராடு பண்ணுவார்.மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'