யு19 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல்: 6வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை
ஹராரே: யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் ஆனது. இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 175 ரன்களை குவித்தார்.
ஜிம்பாப்வே, நமீபியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை(50 ஓவர்) 16வது சீசன் நடந்தது. ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடந்த பைனலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.









இதன் பிறகு 412 என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் பென் டாவ்கின்ஸ் மற்றும் ஜோசப் மூர்ஸ் ஜோடி ஓரளவு ரன் சேர்த்தனர். மூர்ஸ் 17 ரன்னில் அவுட்டானார். டவ்கின்ஸ் அரைசதம் அடித்தார். அவர் 66 ரன்னில் அவுட் ஆனார். பென் மேயஸ் 45 ரன்னிலும், கேப்டன் தாமஸ் ரேவ் 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.காலேப் பால்கோனர் சிறப்பாக விளையாடி 115 ரன்னில் அவுட்டானார். ஜேமிஸ் மின்டோ 28 ரன்னிலும் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள், ஆல்பர்ட் 0, அஹமது 1, செபாஸ்டின் மோர்கன் 0, மானி லேம்ஸ்டன் 3 ரன்னில் அவுட்டாக இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம் 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. யு19 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்வது இது 6வது முறையாகும்.
6வது முறை
இந்திய அணி 19 வயது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு 10 வது முறையாக நேற்று முன்னேறியது. இதில் 2000, 2008, 2012, 2018, 2022,2026 என ஆறு முறை சாம்பியன் ஆனது.
இதுவரை யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன்கள் விவரம்
2000: முகமது கைப்
2008: விராட் கோலி
2012: உன்முக்த் சந்த்
2018: பிரித்வி ஷா
2022: யாஷ் துல்
2026: ஆயுஷ் மாத்ரே
வாசகர் கருத்து (3)
prakash - ,இந்தியா
06 பிப்,2026 - 21:54 Report Abuse
இந்திய அணி இன்னும் பல கோப்பைகளை பெற வேண்டும். 0
0
Reply
ஆனந்த் - madurai,இந்தியா
06 பிப்,2026 - 21:53 Report Abuse
சூரியவன்ஷிக்கு பாராட்டுகள் 0
0
Reply
ஆனந்த் - madurai,இந்தியா
06 பிப்,2026 - 21:53 Report Abuse
இந்திய அணிக்கு வாழ்த்துகள் 0
0
Reply
மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'
Advertisement
Advertisement